கரீபியன் பிரீமியர் லீக்: ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 6 விக்கெட்டுகளால் வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக்: ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 6 விக்கெட்டுகளால் வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில், சென். லூசியா ஸூக்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென். லூசியா ஸூக்ஸ் அணி, 17.1 ஓவரின் போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது நபி ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டிஜே பிராவோ 2 விக்கெட்டுகளையும், அலி கான், கெர்ரி பியர், பவாட் அஹமட், தம்பே ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, மழையின் தாக்கம் காரணமாக ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணிக்கு 9 ஓவர்களுக்கு 72 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, 8 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டேரன் பிராவோ 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும், சாமர் ஹொல்டர் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை சாய்த்த டுவாய்ன் பிராவோ தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசிரியர் - Editor II