தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை

தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை
தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில்  தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் .

யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியர் - Editor