குழந்தையை காப்பாற்றாமல் Pokémon Go விளையாடிய தந்தை

குழந்தையை காப்பாற்றாமல் Pokémon Go விளையாடிய தந்தை

பாரீஸில் நான்காவது மாடியிலிருந்து அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மாலி அகதி ஒருவர் மீட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நேரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்னும் கேள்வியும் எழாமல் இல்லை.

குழந்தை மரணத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தபோது குழந்தையின் தந்தை ரோட்டில் Pokémon Go என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார் என்னும் செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தில், போரின்போது காணாமல்போன ஒரு வீரர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் அவர் ”missing in action” என அறிவிக்கப்படுவார்.

அதே போன்ற ஒரு நடவடிக்கைதான் இந்த குழந்தையின் தந்தை மீதும் எடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெற்றோராக கவனமாக இராமல் அலட்சியமாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்ட அவர் செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

குழந்தையை தனியாக விட்டு விட்டு ஷாப்பிங் சென்ற அவர் தொடர்ந்து Pokémon Go விளையாடச் சென்றுவிட்டதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

குழந்தையின் தாயும் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை, அவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள Réunion தீவுக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்று விட்டார்.

இந்த நிலையில் தான் செய்ததை எண்ணியும், அதன் பின்விளைவுகள் குறித்தும் அந்தக்குழந்தையின் தந்தை மிகுந்த கவலை அடைந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor