அதிகாரிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கிடையில் மோதல்

அதிகாரிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கிடையில் மோதல்

ஜேர்மனியில் Dresden நகரில் அமைந்துள்ள குடியேற்ற மைய அதிகாரிகளுக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 2 பொலிசார் மற்றும் பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளனர்.

புகலிடக்கோரிக்கையார்கள் மையத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக இரண்டு பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து குடியேற்ற அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க செல்கையில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

சுமார், 50 பேர் மோதலில் ஈடுபட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்

ஜார்ஜியாவை சேர்ந்த 4 பேர் இந்த மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் - Editor