அமெரிக்க பகிரங்க டென்னிஸ் முதல் சுற்று: ஜோகோவிச், கெய்ல் எட்மண்ட், நவோமி ஒசாகா வெற்றி!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் முதல் சுற்று: ஜோகோவிச், கெய்ல் எட்மண்ட், நவோமி ஒசாகா வெற்றி!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், முதல் சுற்றுப் போட்டியில், நோவக் ஜோகோவிச், கெய்ல் எட்மண்ட், நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போஸ்னியா- ஹெர்சகோவினாவின் டாமீர் ஸூஹம்ரும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியின் கெய்ல் எட்மண்ட், கஸகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-6, 7-5, 7-5, 6-0 என்ற செட் கணக்குகளில் கெய்ல் எட்மண்ட், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, சகநாட்டு வீராங்கனையான மிசாகி டோயை எதிர்த்து விளையாடினார்.

இரசிர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்குகளில் ஒசாகா வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆசிரியர் - Editor II