கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டதற்காக அரசு வழங்கிய கடன் உதவி: ஆனால் கடன் வாங்கியவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டதற்காக அரசு வழங்கிய கடன் உதவி: ஆனால் கடன் வாங்கியவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் கொரோனா காலத்தில் சிறு வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்ட கடன் தொகையை ஏமாற்றி வாங்கியிருக்கிறார்கள் சிலர்.

அப்படி ஏமாற்றி வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல, சுமார் 850 பேர் மோசடி செய்து அந்த தொகையை வாங்கியிருக்கிறார்கள்.

இதற்காக அரசு செலவிட்ட தொகை 17 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும். ஆனால், பலர் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, பொய் சொல்லி கடன் வாங்கியிருக்கிறார்கள், அதிலும் சிலர் பல முறை கடன் வாங்கியிருக்கிறார்கள்.

சில நிறுவனங்கள் இப்படி மோசடி செய்த தொகை பல மில்லியன் ஃப்ராங்குகள். தொழில் நொடித்துப்போனதாக பொய் சொல்லி வாங்கிய பணத்தில் சிலர் ஆடம்பர கார்கள் வாங்கியதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 50 மில்லியன் ஃப்ராங்குகள் இப்படி மோசடியாக பெறப்பட்டுள்ள நிலையில், 17 மில்லியன் ஃப்ராங்குகள் சூரிச்சில் மட்டுமே மோசடியாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால், இந்த மோசடி தொடர்பாக 850 விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor II