டொராண்டோவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு!!

டொராண்டோவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு!!

கனடாவின் மத்திய டொராண்டோவில் இன்று புதன்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

ஐந்து ஆண்களும், ஒரு பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓக்வுட் மற்றும் மார்லீ வழித்தடங்களுக்கு இடையில், எக்லிண்டன் அவென்யூ வெஸ்டில் உள்ள ஸ்பென்ஸ் பேக்கரியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

அதிகாலை 2 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த அவசர அழைப்பையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டனர்.

சம்பவ நேரத்தில் அடைமழை பெய்து கொண்டிருந்ததால் மக்கள் பலர் பேக்கரிக்குள் நுழைந்திருந்தனர்.

பேக்கரிக்குள் நுழைந்த கும்பலொன்று துப்பாக்கி சூடு நடத்தினர். கருப்பு நிற எஸ்யூவி வாகனமொன்று அங்கிருந்து சென்ற சிசிரிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் வாகனமாக அது இருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.

காயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்களின் உதவியையும் பொலிசார் நாடுகின்றனர்.

ஆசிரியர் - Editor II