மக்கள் பேசுவதை பதிவு செய்து வெளியிடும் சாதனம்

மக்கள் பேசுவதை பதிவு செய்து வெளியிடும் சாதனம்

அமேசான் நிறுவனத்தின் ’Alexa' எனும் மென்பொருள் சாதனம், மக்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னணி நிறுவனமான அமேசான் ’Alexa' எனும் மென்பொருள் சாதனத்தை உருவாக்கியது. பார்ப்பதற்கு Speaker போலவே இருக்கும் இந்த சாதனம், சிறிய ரோபோ போல செயல்படும்.

இதனை வீட்டில் உள்ள மின்னணு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் மின்விசிறி, தொலைக்காட்சி, கதவை திறப்பது முதலியவற்றை இயக்கலாம். மேலும், நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் பதில் தேடி இது நமக்கு அளிக்கும்.

கடந்த 2017ஆம் ஆண்டு இறுதிவரை, உலகம் முழுவதும் உள்ள சுமார் 50,000க்கும் அதிகமான மக்கள் இதனை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த சாதனம் கேள்விகள் கேட்கும் போது அவ்வப்போது மோசமாக சிரித்து இருக்கிறது. இந்த சிரிப்பு சத்தமே பயமுறுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், மக்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து இணையத்தில் இந்த சாதனம் வெளியிடுவதாகவும், வேறு நபர்களுக்கு அனுப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போலந்து நாட்டு தம்பதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அமேசான் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. அத்துடன் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில் கூறுகையில், ‘அந்த தம்பதிகள் பேசியதை தவறாக கேட்டு, அதை பின்பற்றி, அவர்கள் கட்டளை என்று நினைத்துக் கொண்டு அந்த Audio-களை இணையத்தில் வெளியிட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

ஆனால் மக்கள், இது முழுவதும் தவறு. அமேசான் மக்களை வேவு பார்க்கிறது. ’Alexa' செய்வதில் நிறைய தவறு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor