மீண்டும் எகிறும் கொரோனா; அதிகளவானோர் ஐ.சி.யுவில்; கடும் எச்சரிக்கை விடுப்பு!

மீண்டும் எகிறும் கொரோனா; அதிகளவானோர் ஐ.சி.யுவில்; கடும் எச்சரிக்கை விடுப்பு!

அடுத்த இரண்டு வாரத்தில் மருத்துவமனைகளின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அதிகமானோர் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கை பிரான்ஸ் நாட்டில் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நாட்டின் சுகாதார துறை அமைச்சர் ஆலிவர் வேரன் எச்சரித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே பிரான்சில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 8,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவருவதால் நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 1,500-2,000 பேர் ஐ.சி.யூ பிரிவில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் ஊரடங்கு தளர்வால் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கொரோனாவுடன் எதிராக போராட வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன.

எவ்வாறாயினும் ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதன் தளர்வால் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர் - Editor II