கோபத்தால் வந்த வினை: அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் தகுதிநீக்கம்!

கோபத்தால் வந்த வினை: அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் தகுதிநீக்கம்!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், நோவக் ஜோகோவிச் தரவரிசையில் 27வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் முதல் செட்டில் 5-6 என பின்தங்கிய போது, கோபத்தில் பந்தை தரையில் வேகமாக அடித்தார்.

இந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் திகைத்துபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.

ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆசிரியர் - Editor II