இறந்தும் தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி

இறந்தும் தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி

பிரித்தானியாவில் 2 வயது சிறுமி இதய நோயால் உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட அவளின் தம்பிக்கு சரியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அவன் தற்போது நலமாக உள்ளான்.

Northampton நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவர் மனைவி சோபி வூட்டன் (25). சோபிக்கு சிறு வயதிலிருந்தே இதய நோய் உள்ள நிலையில் அவருடைய 15-வது வயதில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2012-ல் சோபி பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அதற்கு இஸ்லா டைலர் என பெயர்வைக்கப்பட்டது.

இஸ்லாவின் உடல் நிலை குறித்து சோபி பெரிதாக கவலைப்படாத நிலையில் சாதாரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இஸ்லாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது தான் பிறப்பிலிருந்தே இஸ்லாவுக்கு இதயநோய் உள்ளது தெரிந்தது, மேலும் தொடக்கத்திலேயே இதை கவனிக்க தவறியதால் நோய் முற்றியது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் இஸ்ரா 2014 மே 8-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து 2016-ல் மீண்டும் கர்ப்பமான சோபி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு மேக்ஸ்வெல் என பெயர்வைக்கப்பட்டது.

இஸ்லாவுக்கு செய்த தவறை மேக்ஸ்வெல்லுக்கும் செய்யக்கூடாது என நினைத்த சோபியா அவனுக்கு சரியான உடல் பரிசோதனை செய்த நிலையில் அவனுக்கும் இதய நோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இதயமாற்று சிகிச்சை நடைபெறவுள்ளது.

மேக்ஸ்வெல் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சோபியா, இஸ்ராவின் மரணம் எங்களை உலுக்கிவிட்டது, அவள் கல்லறையில் இருந்தாலும் மேக்ஸ்வெல்லை சரியாக பார்த்து கொள் என என்னிடம் கூறுவதாக உணர்கிறேன்.

அவள் உடல்நிலையை கணிக்க தவறினோம், ஆனால் மேக்ஸ்வெல் உடல்நலத்தை சரியாக கணித்தோம்.

ஒரு விதத்தில் அவள் தான் தனது தம்பியான மேக்ஸ்வெல்லை காப்பாற்றியுள்ளார் என உருக்கமாக கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor