ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 9ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், இந்தப் போட்டிகள் இரத்துச் செய்யப்படலாம் எனத் தகவல் பரவியது.

இந்நிலையில், ஜப்பானிலுள்ள டோக்கியோவில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர் - Editor II