சுவிஸ் மருத்துவரின் வேலையை பறித்த மாஸ்க்

சுவிஸ் மருத்துவரின் வேலையை பறித்த மாஸ்க்

சுவிட்சர்லாந்தின் Zug மண்டலத்தில் மாஸ்க் அணியாமல் பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவர் உரிய அதிகாரிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோயாளி ஒருவர் புகார் அளித்ததன் பேரிலேயே, பெண் மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Zug மண்டலத்தில் மாஸ்க் அணியாமல் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பணியாற்றுவதாக கூறப்பட்ட புகார் தொடர்பில் அதிகாரிகளால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சம்பவத்தின்போது பெண் மருத்துவர் ஒருவர் மாஸ்க் அணியாமல் பணியில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மருத்துவரை அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தொடர்ந்து பணியாற்றி வந்துள்ள தாம், அசதி காரணமாக மாஸ்க் அணிய தவறியதாகவும்,

உளவியல் ரீதியான அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்வது என்ற முடிவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, எச்சரிக்கை ஏதுமின்றி, ஒரு குற்றவாளியாக பாவித்து வேலையை பறிப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை எனவும் அந்த மருத்துவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் - Editor II