அமெரிக்க வீரரை ipl இல் களம் இறக்குகிறது கேகேஆர். ஷாருக்கான் செம வெவரம் தான்

அமெரிக்க வீரரை ipl இல் களம் இறக்குகிறது கேகேஆர். ஷாருக்கான் செம வெவரம் தான்

ஐபிஎல் சீசன் இந்த வாரம் துவங்க உள்ளது. நம் இந்தியாவில் நடக்காவிட்டாலும் டிவியில் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்வர். TRP ரேட்டிங் அதிக உச்சம் தொடும் என்கின்றனர் வல்லுநர்கள். கொரனாவால் பார்க், பீச், சினிமா செல்ல முடியாத நிலையில் பலரும் டிவி முன் கட்டப்படும் சூழல் எழுந்துள்ளது.

கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் – ஷாருக் தான் உரிமையாளர். எனவே ஆரம்ப முதலே இந்த டீமுக்கு கிளாமர் சற்று ஜாஸ்தி தான். கங்குலி, கம்பிர் என தலைமை பொறுப்பு நகர்ந்து நம்ம லோக்கல் பாய் தினேஷ் கார்த்திக் வசம் உள்ளது டீம்.

இங்கு மட்டுமன்றி வெஸ்ட் இண்டீசில் நடக்கும் CPL இல் “ட்ரினிபாகோ நயிட் ரைடர்ஸ்” என்ற டீமும் உள்ளது ஷாருக் வசம். இங்கு நம்மூரில் எப்படி மும்பை இந்தியன்ஸ் பிரபலமோ அது போல ஜாமாபாவன் டீம் அவர்கள். இம்முறை அணைத்து போட்டிகளையும் வென்று கோப்பையும் வென்றுள்ளது இந்த டீம்.

அலி கான் – பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். தன் 18 வயதில் பெற்றோருடன் சென்று ஓஹியோ நகரில் செட்டில் ஆனவர். பல கிளப் டீம்கள், அமெரிக்க சர்வதேச டீம்மில் ஆடுபவர்.

கனடாவில் நடந்த டி 20 போட்டியில் இவர் ஸ்டைல் பிடித்து போக, வெஸ்ட் இண்டீசில் பரிந்துரை செய்தார். சிபல் கான்ட்ராக்ட்ட கிடைத்தது. தனது வேகப்பந்துவீச்சு வீச்சால் பல முன்னணி பேட்ஸ்மான்களை நிலை குலைய வைத்தார் கான். மேலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் லீகுகளிலும் ஆடியுள்ளார்.

29 வயதான அலி கான் 140 km வேகத்தில் வீசும் திறன் உடையவர். இந்த சீசன் 8 போட்டிகளில் ஆடி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார், ரன் ஆவரேஜ் 7.43 இவரது பிளஸ் என்னவெனில் இறுதி கட்ட ஓவர்களில் அசத்தலாக பந்து வீசுவது தான். இவருக்கு ஐபிஎல் கான்டராக்ட் கிடையாது, எனினும் மற்ற ஐபிஎல் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் துபாய் வந்துள்ளார்.


கொல்கத்தா அணியின் இங்கிலாந்தை சேர்ந்த ஹார்ரி குருனெ என்ற வேகப் பந்துவீச்சாளர் தோள்பட்டை சர்ஜெரி காரணமாக விலகிவிட்டார். அவருக்கு மாற்றாக அலி கானை சேர்க்க முடிவு செய்துள்ளது கொல்கத்தா நிர்வாகம். ஐபிஎல் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கட்டாயம் விளையாடுவார்.

சீசன் துவக்கத்தில் இல்லையெனினும் கட்டாயம் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் அத்தகைய திறன் உடையவர்.

ஆசிரியர் - Editor II