சிறுவனால் கொல்லப்பட்ட இளம்பெண்

சிறுவனால் கொல்லப்பட்ட இளம்பெண்

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் 13 வயது சிறுவன் ஒருவனால் கொல்லப்பட்ட இளம்பெண்ணான Ana Kriegelஇன் இறுதிச் சடங்குகளில் பங்கு கொள்வதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் டப்ளின் பிதுங்கி நிற்கிறது.

மே மாதம் 14 ஆம் திகதி Ana Kriegel(14) காணாமல் போனாள்.மூன்று நாட்களுக்குப்பின் அவளது உடல் தெற்கு டப்ளினிலுள்ள Lucanஇன் கண்டெடுக்கப்பட்டது.

அவளைக் கொலை செய்ததாக 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது எதிர்காலம் கருதி அவனது பெயர் உட்பட எந்த விவரமும் வெளியிடப்படக்கூடாது என நீதிமன்றம் உறுதியாக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் Ana Kriegelஇன் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. அவளது இறுதிச் சடங்கில் Ana Kriegelவின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் அனைவரும் பளிச்சென உடை அணிந்து பங்கேற்றனர்.

Ana Kriegelஇன் இறுதிச் சடங்கில் பலர் தங்கள் அஞ்சலியைச் செலுத்தியபோது அவளது பள்ளியின் துணை பிரின்சிபலான Clare McHughஇன் அஞ்சலி அனைவரது கண்களையும் கலங்கச் செய்தது.

அன்னாவைப் புகழ பல வார்த்தைகள் இருந்தாலும் அவள் ஒரு அன்னப்பறவை என்று நான் கூறுவேன், எளிமையும் அழகுமாய் அவள் வலம் வந்தாள், ஆனால் அவளது அழகு வெறும் உடல் சார்ந்ததல்ல, அவள் அழகான மனம் கொண்டவள், இரக்கமும் அன்பும் கொண்டவள் என்று கூறிய Clare McHugh, Ana Kriegelஇன் தாயைப் பார்த்து நீங்கள் ஒரு அருமையான மகளை வளர்த்திருக்கிறீர்கள், நீங்கள் அவளை மகளாக அடைந்ததற்கு பெருமைப் பட வேண்டும். அன்னாவை நினைக்கும்போதே நம்மையறியாமல் ஒரு புன்னகை நம் முகத்தில் தோன்றும், எப்போதும் அவளை அதே புன்னகையுடன் நினைவுகூருவோம் என்று கூறியபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.

ஆசிரியர் - Editor