ஒருநாள் தொடரை வெல்லப் போவது யார்? இங்கிலாந்து- அவுஸ்ரேலியா நாளை மோதல்!

ஒருநாள் தொடரை வெல்லப் போவது யார்? இங்கிலாந்து- அவுஸ்ரேலியா நாளை மோதல்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான, மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்போட்டி உள்ளூர் நேரப்படி நாளை (புதன்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் தலா 1 வெற்றிகளை பதிவுசெய்துள்ளதால், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டி இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இரு அணிகளிலும் பலம்வாய்ந்த சிறப்பான வீரர்கள் உள்ளாதால் இப்போட்டியின் வெற்றியை கணிப்பது கடினம். ஆகவே போட்டியின் முடினை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர் - Editor II