20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு குறித்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைப்பு

20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு குறித்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைப்பு

20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆளும்கட்சி குழுவின் அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை, நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில், முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள முரண்பாட்டு நிலைமை தொடர்பில், கடந்த தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கமையவே, அது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றை பிரதமர் நியமித்ததுடன், அதன் அறி;க்கையும் கோரியிருந்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும்வரையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவு வரத்தமானியை நாடாளுமன்றில் சமர்ப்;பிக்காமல் இருப்பதற்கும் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்க குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், 20 அம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II