குடிகாரனை திருமணம் செய்ய மறுத்த பெண் தாயின் முன் கதற கதற வெட்டிக்கொன்ற கொடூரன் – லண்டனில் சம்பவம்

குடிகாரனை திருமணம் செய்ய மறுத்த பெண் தாயின் முன் கதற கதற வெட்டிக்கொன்ற கொடூரன் – லண்டனில் சம்பவம்

சம்பவ தினத்தன்று, வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வெறும் 23 வயதே ஆன ஜெயக் குமார் சோதி என்னும் நபர் பவானி வீட்டுக்கு சென்று பேசியுள்ளார். அங்கே ஹாலில் பவானி மற்றும் அவரது அம்மா இருந்துள்ளார்கள். 12.30 மணிக்கு திடீரென கத்தியை எடுத்து பவானியை சரமாரியாக குத்தியுள்ளார் ஜெய்குமார். தம்பி மக்களை ஒன்றும் செய்ய வேண்டாம், என்னை கத்தியால் குத்து என்று கதறி அழுது கெஞ்சிக் கேட்டார் பவானியின் அம்மா. ஆனால் ஜெய்க்குமார், கேட்டபாடாக இல்லை.

4 தடவை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பவானி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். பொலிசாரும் பரா மெடிக்ஸ்சும் வந்து பவானியை காப்பாற்ற முனைந்தார்கள். ஆனால் அவர் வீட்டின் ஹாலில் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 23 வயது ஆகும் ஜெய்குமார் அதிகம் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். இதனால் திடீரென கல்யாண வீட்டை நிறுத்தி விட்டார் மணமகளான பவானி பிரவீன்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஜெய்குமார் கத்தி ஒன்றுடன் லெஸ்டரில் உள்ள, அவர்கள் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி 12.30க்கு சென்று பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள் உள்ளே அனுமதித்துள்ளார்கள். அங்கே சற்று நேரம் பேசிவிட்டு கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார் ஜெய்குமார் என்று கண்ணிர் மல்க பவானியின் அம்மா இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

ஆசிரியர் - Editor II