ஒரு நாள் தொடரில் யாருக்கு வெற்றி? ஆஸி. – இங்கிலாந்து மோதல்!

ஒரு நாள் தொடரில் யாருக்கு வெற்றி? ஆஸி. – இங்கிலாந்து மோதல்!

இங்கிலாந்துக்கு சென்றுள்ள அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியாவும், 2 வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இவ்விரு அணிகள் இடையிலான 3 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று பிரித்தானிய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகின்றது.

இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ ஸ்மித் இன்றைய போட்டியில் களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது

ஆசிரியர் - Editor II