பிக்பாஸ் சீசன்-4இல் களமிறங்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் பட நாயகி.. படையை கிளப்பிய தல ஆர்மி

பிக்பாஸ் சீசன்-4இல் களமிறங்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் பட நாயகி.. படையை கிளப்பிய தல ஆர்மி

நாள் நெருங்க நெருங்க பிக்பாஸ்-4 நிகழ்ச்சி பற்றிய செய்திகள் அளவுக்கதிகமாக சமூக வலைதளங்களில் பரவி கொண்டிருக்கின்றன.

தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல தினமும் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தல அஜீத்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தில் பிரபல பாடகி வசுந்தரா தாஸ் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசுந்தரா தாஸ் ஹீரோயினாக நடித்த ஒரே படம் சிட்டிசன் தான். இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தல ரசிகர்களின் காதுக்கு செல்ல தல அஜீத்தின் சூப்பர் ஹிட் பட நடிகையாச்சே என அவருக்காக ஒரு ஆர்மியை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த சீசன் களைகட்ட போகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

ஆசிரியர் - Editor II