மின்சார அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு..!

மின்சார அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு..!

இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் டீசல் எரிபொருள் மூலம் இயங்கும் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு மாறாக நிலைபெறுதகு வலு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய மின்சார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையில் மின்சார அமைச்சினால் இயங்குவதற்குள்ள தேசிய மின்சார திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகிவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா நாட்டுத் தூதுவர் அலைநா பீ டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

இரு நாட்டு ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தை மையமாக்கொண்டு நடைபெற்று கலந்துரையாடளின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய மின்சார தயாரிப்புக்காக நிலைபெறுதகு வலு சக்தியின் பயன்பாட்டை 70% வீதத்தால் அதிகரிக்க செய்வதற்கும் டீசல் எரிபொருளின் பயன்பாட்டை 5% வீதம் வரை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதோடு தற்போது இருக்கும் நிலைபெறுதகு வளங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் திட்டமிட்டுள்ளதாகவும் மின்சார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் மின்சார துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் நாட்டுக்குள் புது நிலைபெறுதகு வள திட்டங்களுக்காக முதலீடு செய்வதற்கும் தமது நாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு செய்யப்படவுள்ளனர் என்பதையும் அமெரிக்கக தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதார பிரிவுத் தலைவர் சூசன். எப்.வோக் உம் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II