சுவிசில் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிசில் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் குறித்த சாலை விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளியன்று தனது காரில் சென்ற குறித்த இளைஞர் சாலை ஓரத்தில் வாகனத்தை மோதவிட்டுள்ளார்.பின்னர் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிசாருக்கு தெரிய வந்தது. குறித்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என கூறப்படுகிறது

இந்த நிலையில் அதே நாள் இரவு குறித்த இளைஞர் சாலையின் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தி வந்தவர் திடீரென்று தடுப்பு வேலி மீது மோதியுள்ளார்.இதில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளது. மட்டுமின்றி விபத்து நடந்த உடன் அங்கிருந்து மாயாமாகியும் உள்ளார். 

கண்காணிப்பில் இருந்த பொலிசார் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வாகன உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.24 மணி நேரத்தில் அவர் ஏற்படுத்திய இழப்பிற்கு அவரிடம் இருந்தே அபராதம் வசூலிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

அபராதம் பல ஆயிரம் பிராங்க் என இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் விசாரணையின் ஒருபகுதியாக அவரிடம் இருந்து சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளையும் பொலிசார் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் - Sellakumar