பாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை

பாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை

பாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Pass Paris Seniors என அழைக்கப்படும் இந்த இலவச பயண அட்டை, முதியோர்களை பொது போக்குவரத்துக்களில் பயணிக்க வைக்கத் தூண்டும் விதத்தில் அமையும் எனவும் இந்த இலவச அட்டையானது, கடந்த மூன்று வருடங்களாக பாரிசில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி இந்த இலவச பயண அட்டை உடல் ஊனமுற்றோர்களுக்காகவும் இலவசமாக இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதாந்த வருமானமாக 2,430 யூரோக்களுக்கும் கீழ் பெறுபவர்கள் மாத்திரமே இந்த சேவையினால் பயனடைய முடியும் எனவும் சில விதிமுறைகளையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு முற்று முழுதாக மாதா மாதம் நவிகோ அட்டையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Sellakumar