பிரான்ஸில் கார்களை கொள்ளையிடும் கும்பல் சிக்கினர்.

பிரான்ஸில் கார்களை கொள்ளையிடும் கும்பல் சிக்கினர்.

பிரான்ஸில் 18 வயது முதல் 40 வயதுகளைக் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று விலை மதிப்புள்ள கார்களை திருடி வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

Val-d'oise மற்றும் Yvelines ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து இவர்கள் 51 கார்களை இதுவரை திருடியுள்ளனர்.திருடிய கார்களை துண்டு துண்டாக பிரித்துவிட்டு அனைத்தையும் கழுவி துடைத்து புதிது போல ஆக்கிவிட்டு இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்துள்ளார்கள்.

இதுவரை 80,000 யூரோக்களுக்கு மொத்தமாக உதிரிப்பாகங்களை இந்த கொள்ளக்கார குழு விற்பனை செய்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினை மூன்று தினங்களுக்கு முன்னர் பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.

ஆசிரியர் - Sellakumar