விஜய் தான் இந்தியாவில் நம்பர் 1 நடிகர்.. மற்ற நடிகர்களின் சாதனையை விரட்டி விரட்டி ஓடவிட்ட தளபதி

விஜய் தான் இந்தியாவில் நம்பர் 1 நடிகர்.. மற்ற நடிகர்களின் சாதனையை விரட்டி விரட்டி ஓடவிட்ட தளபதி

ஆனால் சமீபகாலமாக விஜய்யின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜய்யின் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருப்பதை பார்க்க முடிகிறது.

சினிமாவின் வசூல் சாதனைகள் தற்சமயம் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் தளபதி விஜய், சமூக வலைதள சாதனைகளிலும் முன்னணியில் உள்ளார்.

அந்த வகையில் இந்திய நடிகர்களே மிரண்டு போகும் அளவுக்கு ஒரு சாதனையைச் செய்துள்ளார் விஜய். விஜய் செய்துள்ளார் என்பதை விட அவரது ரசிகர்கள் அவருக்கு இந்த சாதனையை செய்து கொடுத்திருக்கின்றனர் என்று கூறினால் தான் சரி.

விஜய் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் இருந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தினருடன் தளபதி விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி காட்டு தீ போல் வைரல் ஆனது.


தற்போது அந்த புகைப்படம் ட்விட்டரில் இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ளது. விஜய்யின் அந்த புகைப்படத்திற்கு 144.3K Retweets, 33.1K Quote Tweets, 356K Likes கிடைத்தது.

இதுவரை எந்த ஒரு புகைப்படமும் இவ்வளவு ரீட்வீட் பெற்றது இல்லை என்பதை தெரிவித்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II