சுவிஸில் விளையாட்டு மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி……

சுவிஸில் விளையாட்டு மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி……

சுவிட்சர்லாந்தில் கால்பந்து மற்றும் ஹொக்கி மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதுடன் புதிய தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

இந்த தடை உத்தரவானது அரசியல் வட்டாரத்திலும், விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் விளையாட்டு மைதானங்களில் 1,000 பேர்களுக்கு அதிகமான எண்ணிக்கையை அனுமதிக்க உள்ளனர்.

இந்த உத்தரவானது சுவிஸ் விளையாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்தாலும், இனி அடுத்த உத்தரவு வெளியாகும் வரை விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது பல தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடை உத்தரவானது கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுவரும் மதுபான விடுதிகளை மேலும் தண்டிப்பதாகவும் இதனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

மது விற்பனை தடை செய்யப்படுவதால் சமூக விலகல் பராமரிக்கப்படும் என கூறுபவர்கள், மைதானத்தில் சிற்றுண்டி விற்பனையையும் தடை செய்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.

ஆசிரியர் - Editor II