பிரான்சில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய 4 பேருக்கு நேர்ந்த கதி!

பிரான்சில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய 4 பேருக்கு நேர்ந்த கதி!

பிரான்சில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய நான்கு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் திகதி இரவு Béziers நகரில் எட்டு காவல்துறை அதிகாரிகளை நான்கு நபர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

காவல்துறையினர கீழே தள்ளி வீழ்த்தியும், அவர் மீது ஏறி அழுத்தியும் தாக்குதல் நடத்தியிருந்தனர். பின்னர் இறுதியில் காவல்துறையினர் காப்பாற்றப்பட்டதோடு, அந்த நான்கு பேரும் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக 30 வயதுடைய டிரைவர் ஒருவரும் உள்ளார். அவர் உட்பட மொத்தம் நால்வருக்கு நேற்று புதன்கிழமை மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Béziers நகர குற்றவியல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II