வீதி கால்வாயில் விழுந்த குட்டியானை… போராடி மீட்டெடுத்த தாய் யானை…! வைரலாகும் வீடியோ

வீதி கால்வாயில் விழுந்த குட்டியானை… போராடி மீட்டெடுத்த தாய் யானை…! வைரலாகும் வீடியோ

வார்த்தைகளே இல்லாத வடிவம்; அளவே இல்லாத அன்பு;  சுயநலமே இல்லாத இதயம்; வெறுப்பை காட்டாத முகம் என்றால் அது தாய் என கூறுவார்கள். அத்தகைய தாய்மை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல விலங்குகளுக்கும் உண்டு.

இதனை நிரூபிக்கும் வகையில் யானை ஒன்று கால்வாயில் விழுந்த தனது குட்டியை பொறுமையாக தன்னம்பிக்கையுடன் போராடி தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 52 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ தாய்மை மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

https://twitter.com/i/status/1258224712057905153

ஆசிரியர் - Editor II