கோட்டாபய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்! ஒன்று கூடிய தமிழ் தேசிய கட்சிகள்

கோட்டாபய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்! ஒன்று கூடிய தமிழ் தேசிய கட்சிகள்

கோட்டாபய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் மக்கள் மனித உரிமை மனிதாபிமான செயற்பாடுகளைப் பாதுகாப்போம் எனும் நோக்கத்திற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருகின்றனர்.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் த.இளங்கலைஞர் மண்டபத்தில் விசேட கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி கோட்டாபயவின் அரசால் மனித உரிமை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளும் அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் விரிவாக ஆராயப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஐனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் - Editor II