கொள்ளையடிக்கும் பொருளாதார திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே 20ஆவது திருத்தம்!

கொள்ளையடிக்கும் பொருளாதார திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே 20ஆவது திருத்தம்!

ஸ்ரீலங்காவில் அடிப்படை உரிமைகளை மீறிய விடயம் தொடர்பில் ஜனாதிபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடிய வகையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் காணப்பட்ட நிலையில், 20ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி செய்த எந்தவொரு குற்றத்தையும் சட்டத்தின் முன் விசாரணை செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பத்தொன்பதாவது திருத்தம் ஜனநாயகத்தை பலப்படுத்தியது. 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்த போதிலும், அது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இப்போது மீண்டும் அரசாங்கத்தின் 20ஆவது திருத்தம் ஜே.ஆரைப் போன்ற ஒரு கொள்ளையடிக்கும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கான நிர்வாக ஜனாதிபதி பதவியை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

நாட்டின் மொத்த கடன் சுமை 14 ஆயிரம் கோடியாகும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம் கோடி கடன்கள் மற்றும் வட்டி தவணைகளை செலுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ஜே.ஆருக்கு அப்பால் சென்று ஜனநாயகத்தை சுருக்கி ஒரு சர்வாதிகார ஜனாதிபதி பதவியை உருவாக்க விரும்புகிறார்.

கொள்ளையடிக்கும் பொருளாதார திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அது. 20ஆவது திருத்தத்தில் உள்ள திட்டங்கள் மிகவும் சிக்கலானவை. அவற்றில் சிலவற்றை நாம் பின்வருமாறு அடையாளம் காணலாம். இன்றைய சமுதாயத்தில், சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்பது ஒரு அடிப்படை கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

19ஆவது திருத்தத்தின் கீழ், அடிப்படை உரிமைகளை மீறியதற்காக ஜனாதிபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. சிவில் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகளில் மாத்திரமே அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், ஜனாதிபதி மீண்டும் 20ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய அவர் செய்த எந்தவொரு குற்றத்தையும் சட்டத்தின் முன் விசாரிக்க முடியாது.

கொள்ளையடிக்கும் பொருளாதார பயணத்தின் போது ஏற்படக்கூடிய மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான வழக்குகளைத் தவிர்ப்பதற்கான முயற்சியே இது. இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட விஜித ஹேரத், செப்டெம்பர் 2ஆம் திகதி, அமைச்சரவை 20ஆவது திருத்தத்திற்கு அனுமதி அளித்ததாக அறிவிக்கப்பட்டதாகவும், எனினும் தற்போதைய நிலைமைய அவதானிக்கையில், அவர்களில் யாரும் இதை வாசித்து அறிந்ததாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செப்டம்பர் 2ஆம் திகதி, அமைச்சரவை 20ஆவது திருத்தத்திற்கு அனுமதி அளித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் யாரும் இதைப் வாசித்து அறிந்ததாக தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் பிரதமர் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்கிறார்.

ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளனர். இதிலிருந்து 20 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்தை எல்லையற்ற அளவில் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகும், நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச யாரும் முன்வரவில்லை.

நாளைய நாட்டின் தலைவிதி இன்று அமைச்சரவையின் தலைவிதியிலிருந்து தெளிவாகிறது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இன்று கை பொம்மையாகியுள்ளனர். சர்வாதிகார சக்தி நாட்டிற்கும் மக்களுக்கும் மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்பது மிக விரைவில்தெரிய வரும் எனவும் இந்த ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார சக்தி நாட்டிற்கும் மக்களுக்கும் மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்பது விரைவில் அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வரும். இந்த திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை சுருக்கி நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு திருத்தமாகும்.

ஆளும் கட்சி சர்வாதிகார நிர்வாகியால் முதலில் தாக்கப்பட்டது. குழு கூட்டத்தில் இதை திருத்தலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த திருத்தங்கள் என்ன என்பதை யாரும் வெளியிடவில்லை. அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட தெரியாது. ஆளும் கட்சியில் அவர்களின் மனசாட்சியை எழுப்பவும், அரசியலமைப்பின் இந்த 20ஆவது திருத்தத்தை எதிர்க்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II