கினிகத்ஹேனவில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு...!

கினிகத்ஹேனவில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு...!

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மலை 4 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதேச வாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக அட்டன் முதல் நுவரெலியா வரையிலான பிரதான வீதி மற்றும் கித்துல்கலை முதல் அட்டன் வரையிலான பிரதான வீதி, மற்றும் பேராதெனிய முதல் நுவரெலியா வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II