கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்!

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்!

கொழும்பு – காலி முகத்திடல் தொடக்கம் பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வரையில் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதை அமைக்கும் உத்தேச திட்டத்தை நகர அபிவிருத்தி ஆணையம் முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உத்தேச திட்டம் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நகர அபிவிருத்தி ஆணையத்தின் தலைவர் ஹர்ஷன் டி சில்வா மற்றும் பணிப்பாளர் என்.பி.கே.ரணவீர ஆகியோருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளனர்.

நகர அபிவிருத்தி ஆணையத்தின் செயல் திட்ட இயக்குனர் வை.ஏ.ஜி.கே.குணத்திலக்கவின் உதவியுடன் திட்டத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II