கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தும் மாணவனை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தும் மாணவனை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பள்ளி ஒன்றில் கொரோனா  பாதிக்கப்பட்டது தெரிந்தும் தனது மகனை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பியுள்ள  சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது.  நோய் தடுப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தியுள்ள அதே வேளையில் அந்நாட்டு அரசு,  ஊரடங்கு தளர்வை கொண்டுவந்து  பள்ளிகளையும் திறந்துள்ளது. இதனால் இம்மாத தொடக்கம் முதல் அங்கு  பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மாசசூசெட் மாகாணத்தில் உள்ள அட்ல்போரோ உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


அதில் ஆறாவதாக கொரோனா பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் அந்த  சிறுவனுக்கு நோய் பாதிப்பு இருப்பதை தெரிந்தும் பள்ளிக்கு அனுப்பியுள்ளதாக  அம்மாகாணத்தின் மேயர் பால் ஹெரூக்ஸ் தெரிவித்துள்ளார். 

ஒரு குழந்தையை – ஒரு இளைஞனை – பள்ளிக்கு கொரோனா பாதிக்கப்பட்டது  தெரிந்தும் அனுப்புவது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை” இது மிகவும் மோசமான  செயல். உங்கள் பிள்ளைக்கு கொரோனா வைரஸ் உள்ளது, நேர்மறையானது  என்று உங்களுக்குத் தெரிந்தால்,எந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தையை  பள்ளிக்கு அனுப்பக்கூடாது என அவர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார். 


இதனிடையே அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்த சுமார் 28 மாணவர்கள் 2  வார தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்..


அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் ஒக்லஹோமா, கிரீன் ஃபீல்ட்  இண்டில், போஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு சென்ற சில  மாணவர்கள் கொரோனா அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆசிரியர் - Editor II