காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும்..!

காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும்..!

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லமிற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II