பல்கலைக்கழகம் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

பல்கலைக்கழகம் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஸ்ரீலங்காவின் பிரதான பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் உள்ள 6 பொறியியல் பீடங்களுக்குமாக மேலும் 405 மாணவர்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதான பொறியியல் பீடங்கள் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களான பேராதனை, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருகுணு, மொரட்டுவ மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கே இவ்வாறு மாணவர்களை அதிகாிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II