பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு வெட்டப்படும்… நைஜீரியா நாட்டில் அதிரடி சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு வெட்டப்படும்… நைஜீரியா நாட்டில் அதிரடி சட்டம்!

உலகில் கொரோனா அச்சுறுத்தல் ஒரு புறம் இருக்க இந்த சவாலானகாலகட்டத்தில் பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நைஜீரிய நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அங்கு இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், பாலியல் குற்றங்களை குறைக்க கடும் தண்டனை முறையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அதாவது நைஜீரிய நாட்டில் இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் பிறப்புறுப்பு வெட்டப்படும், மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் பெண் குற்றவாளிகள் எனில் அவர்களின் கருப்பை குழாய் (பாலோப்பியன் குழாய்) அகற்றப்படும்’ என அதிரடி சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் உள்ள சட்டப்படி, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறார்களை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்துவோருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த சட்டமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது, நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வண்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்த தண்டனை அறிவிப்பு குற்றவாளிகளிடையே கலக்கத்தையும், பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்று வருகிறது. 

ஆசிரியர் - Editor II