கற்றாழையை வேக வைத்து சாப்பிடுட்டுள்ளீர்களா??

கற்றாழையை வேக வைத்து சாப்பிடுட்டுள்ளீர்களா??

சதைப் பற்றுடன் முழுக்க முழுக்க மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு தாவரம் என்றால் அது கற்றாழை.

நம்முடைய தலை முதல் பாதம் வரையிலும் உள்ள அத்தனை பிரச்சினைக்கு மருந்தாக இருக்கும் கற்றாழை.

அப்படிப்பட்ட கற்றாழையை வேக வைத்து கூட சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்று பார்க்கலாம்.

வேகவைத்து சாப்பிடுதல்

 • கற்றாழையை வேகவைத்து சாப்பிடும் போது, கசப்புத் தன்மையையும் நீங்கும்.
 • கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உப்பு மற்றும் வறுத்த சீரகம் சேர்க்கவும்.
 • இதனை உங்கள் சாண்டவிச் அல்லது ஸ்டார்டர் உணவுகளில் மேலே தூவி உட்கொள்ளலாம்.
 • தண்ணீர் பதம் அதிகம் உள்ள கற்றாழை வேகவைப்பதால் மிகவும் மென்மையாக மாறுகிறது. இதனை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

நன்மைகள்

 1. வாய்வு அமிலத்தை குறைவாக சுரக்கச்செய்து நெஞ்செரிச்சலுக்கு முதன்மை காரணமான எதுக்களித்தலைப் போக்க உதவுகிறது கற்றாழை.
 2. கற்றாழையை தினமும் ஒரு அளவு சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
 3. கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கீல்வாதம் தொடர்பான மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது.
 4. கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைத் தடுத்து , மூட்டுகளில் உண்டான காயத்தை அமைதிப்படுத்த கற்றாழை சாறு உதவுகிறது.
 5. கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான தொற்று பாதிப்பு மற்றும் காயங்களை போக்க உதவுகிறது.
 6. கற்றாழை பவுடர் கொண்டு தினமும் பற்களை தேய்ப்பதால் எந்த ஒரு தொற்று பாதிப்பு , வாய் அல்சர் , பற்குழி போன்றவை குணப்படுத்தப்படுகிறது .
 7. உங்கள் ஈறுகளை பலமாக்க, ஒவ்வொரு முறை கற்றாழை சாறு பருகும்போதும், அதனை விழுங்குவதற்கு முன்னர் ஒரு முறை கொப்பளித்து விட்டு பின்பு விழுங்கவும்.
ஆசிரியர் - Editor II