கொவிட்-19: அமெரிக்காவில் ஏழு மில்லியனை நெருங்கும் மொத்த பாதிப்பு!

கொவிட்-19: அமெரிக்காவில் ஏழு மில்லியனை நெருங்கும் மொத்த பாதிப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் இதுவரை 69இலட்சத்து 25ஆயிரத்து 941பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை இரண்டு இலட்சத்து மூவாயிரத்து 171பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு 51ஆயிரத்து 345பேர் பாதிக்கப்பட்டதோடு, 958பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 25இலட்சத்து 30ஆயிரத்து 876பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14ஆயிரத்து 179பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன், 41 இலட்சத்து 91ஆயிரத்து 894பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஆசிரியர் - Editor II