லவ் ஜிகாத்துக்கு’ எதிராக அவசரச் சட்டம் – யோகி ஆதித்யநாத் முடிவு

லவ் ஜிகாத்துக்கு’ எதிராக அவசரச் சட்டம் – யோகி ஆதித்யநாத் முடிவு

காதல் என்ற பெயரில் மதமாற்றத்தை தடுக்கத் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “காதல், திருமணம் என்ற பெயரில் சமீபமாகக் கூட பெண்களை மயக்கி மதம் மாற்றி பிறகு கொடுமைப்படுத்தி கொலை வரையிலும் நடைபெறுகிறது.

இதுகுறித்து அவதானம் செலுத்தியுள்ள முதல்வர் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நல்ல உபாயத்தை வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்ய வேண்டும். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உத்தரவாதம் செய்யவும் சட்டம் அவசியம் என்று முதல்வர் உணர்கிறார்” என்றார்.

ஆசிரியர் - Editor II