மதுசூதனன் தலைமையில் 28ஆம் திகதி கூடுகின்றது அதிமுக செயற்குழு

மதுசூதனன் தலைமையில் 28ஆம் திகதி கூடுகின்றது அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், வருகிற சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கோபமாக சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி அதிமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II