இந்தியாவில் கொரோனா பாதிப்பு 52 லட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 52 லட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்ட் எண்ணிக்கை 52 இலட்சத்து 14 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 41 இலட்சத்து 12 ஆயிரத்து 551 பேர் மீண்டுள்ளனர் என்றும் மொத்த பாதிப்பில் இது 78.86 சதவீதமாகும் என்றும் மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,174 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 31 ஆயிரத்து 351 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலேயே கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதுடன் அந்த மாநிலங்களில்தான் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

கடந்த 11 நாட்களாக நாடு முழுவதும் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II