திருமணமாகி 06 மாதங்களில் மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!

திருமணமாகி 06 மாதங்களில் மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!

தமிழ்நாடு கரூர் சின்னஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் அவருடைய மனைவியுடன் இளநீர் வாங்குவதற்காக நேற்று அதிகாலை பொள்ளாச்சிக்கு சென்று விட்டனர்.

இதனால் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும், அவருடைய மனைவி ஷஸ்மிதாவும் (23) இளநீர் கடை மற்றும் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இளநீர் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில், தலை மற்றும் கைகளில் அவருக்கு வெட்டு விழுந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தன் கண்முன்னே கணவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த ஷஸ்மிதா நிலைகுலைந்து போனார்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தவர்கள் யார்?, என்ன காரணத்துக்காக அவரை கொலை செய்தனர், காதல் பிரச்சினை காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II