முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்

முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்

சரவணன்-மீனாட்சி சீரியலில் மைனா என்ற பெயரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நந்தினி. அதில் அவருக்கு கிடைத்த பெயர் அடுத்தடுத்து சீரியல்கள் வாய்ப்பு கிடைத்தது.

அது மட்டும் இல்லாமல் சில நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வந்தார். இவர் சக சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சீரியலில் நடித்துக் கொண்டே பிஸியாக இருந்த நந்தினிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷ செய்தியை அவர்கள் மகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.

தற்போது குழந்தையின் கையை பிடித்தவாரு எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
ஆசிரியர் - Editor II