15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்

15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டிற்கும் மேலாக முன்னனிலையில் இருந்து வரும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன்.

இது அரைநூற்றாண்டு நடப்பாக இருந்தாலும், இதுவரை பல முறை திரையுலகில் தங்களது படங்களின் மூலம் மோதிக்கொடுள்ளார்கள்.அதிலும் மனிதன் - நாயகன், பாண்டியன் - தேவர் மகன், புன்னகை மன்னன் - மாவீரன் ஆகிய படங்கள் ஒன்றாக வெளிவந்து மோதிக்கொண்டதை நம்மால் மறக்க முடியுமா.

இதுவரை எவ்வித போட்டியாக இருந்தலும் அது சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும், உலக நாயகன் கமல் ஹாஸானிடமும் படங்கள் ரீதியாக மட்டுமே தான் இருந்தது. அதனை பல மேடைகளில் நாம் பார்த்திருப்போம்.

இவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மோதிக்கொண்ட படங்கள் என்றால் சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ் தான். இதில் கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் ரஜினியின் சந்திரமுகி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

இந்நிலையில் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் படமும், கமலின் படமும் ஒன்றாக மோதிக்கொள்ள போகிறது. ஆம் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கி வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.

அதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் " கமல் ஹாசன் 232 " படமும் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் என்று அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்த போஸ்டரில் அறிவித்துவிட்டனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த முறை வெற்றி யார் பக்கம் என்று.

ஆசிரியர் - Editor II