லவ் ப்ரபோஸ் செய்த நடிகர் - கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி

சென்றஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவை காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் அபிராமி, சமீபத்தில் விஜய் டிவி நடத்தியுள்ள ' முரட்டு சிங்கிள் ' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வரும் டாஸ்க் ஒன்றில் சின்னத்திரை நடிகர் ஒருவர் அபிராமியிடம் ப்ரபோஸ் செய்கிறார். அப்பொழுது அழுது கொண்டே கோபமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகை அபிராமி வெளியேறும் ப்ரமோ வெளிவந்துள்ளது.

ஆசிரியர் - Editor II