மக்கள் செல்வனை எட்டாத உயரத்திற்கு தூக்கிச் சென்ற 10 படங்கள்! 2012 பிறகு விஜய்சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்!

மக்கள் செல்வனை எட்டாத உயரத்திற்கு தூக்கிச் சென்ற 10 படங்கள்! 2012 பிறகு விஜய்சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்!

கிட்டத்தட்ட 5 வருடங்களாக துணை நடிகராகவே சினிமாவில் நடித்து அதன் பின் கதாநாயகனாக உயர்ந்த பெருமைக்குரியவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ரசிகர்களுக்கு கண்ணத்தில் முத்தமிட்டு பாசத்தை வெளிப்படுத்தும் பாசக்காரர்தான் இவர்.

2012ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பீட்சா’ படத்தில், மிடில் கிளாஸ் காதலன் தனது காதலிக்கு வசதியான வாழ கொடுப்பதற்காக, இல்லாத பேயை இருப்பதாக நம்ப வைத்து முதலாளியிடம் இருந்து சாதுரியமாக வைரத்தை ஆட்டைய போடும் வித்தியாசமான திரில்லர் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய் சேதுபதி.

அதே வருடத்தில் விஜய் சேதுபதி,காயத்ரி நடிப்பில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விக்னேஸ்வரன் பழனிசாமி, பாகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் நண்பர்களாக படத்தில் உறுதுணையுடன் நடித்திருப்பார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிரிக்கெட் சம்பவத்திற்குப் பிறகு பிற்போக்கு மறதி நோயை அனுபவிக்கும் ஒரு இளைஞன் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த படம்.

அதன்பின், அடுத்த வருடமே நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூதுகவ்வும்’ படத்தில் நகைச்சுவை கலந்த குற்ற பின்னணியில், வேடிக்கையான பேச்சு மக்களின் அன்றாட வாழ்க்கையையும், நவீன சமுதாயத்தையும் எவ்வாறு மூழ்கடித்தது என்பதுதான் இந்தப்படத்தின் முக்கிய கருத்து. சூது காவும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியான நல்ல வசூலை தட்டிச்சென்றது.

2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காது கேட்காத தனது காதலியின் கனவுக்காக என்ன வேணாலும் செய்யத் துணியும் காதலனாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்சேதுபதி.

அதன்பின் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தர்மதுரை’ படத்தில் டாக்டராக தனது வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார். இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்தப் படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

அதே வருடத்தில் வெளியான ‘சேதுபதி’ படத்தில் கம்பீரமான போலீஸ் கெட்டப்பில், போலீசார் சந்திக்கும் சவால்களை சுட்டிக் காட்டியிருப்பார் மக்கள் செல்வன்.

அடுத்த வருடத்திலேயே தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக ‘கவண்’ படத்தில் ஸ்டைலிஷ் ஹீரோவாக மாஸ் காட்டியிருப்பார் விஜய் சேதுபதி.

அதே வருடத்தில் நெகட்டிவ் ரோலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மாதவனுடன் வில்லனாக நடித்த படம் தான் ‘விக்ரம் வேதா’ திரைப்படம்.

2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ படத்தின் மூலம் ரசிகர்களை தங்கள் பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் நினைத்து பார்க்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிக்காட்டிருப்பார் விஜய் சேதுபதி.

நடிகர்களுக்கெல்லாம் சவாலாக விதவிதமான கேரக்டர்களில் நடித்து அசத்தும் விஜய் சேதுபதி முதன்முதலாக 2019ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இவருடைய உழைப்பிற்கு பலனாகவே தற்போது பாலிவுட் வரை தனது நடிப்பை பறைசாற்றி வருகிறார் விஜய் சேதுபதி.


TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்


ஆசிரியர் - Editor II