மூன்றாவது காதலருடன் நயன்தாரா செய்யும் அலப்பறை.. தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

மூன்றாவது காதலருடன் நயன்தாரா செய்யும் அலப்பறை.. தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

நயன்தாராவின் சினிமா கதை ஊர் உலகத்துக்கே தெரியும். நடிகையாக தன்னுடைய வெற்றியை பதித்த நயன்தாரா காதல் வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்துள்ளார்.

முதன் முதலாக தமிழ் சினிமாவின் காதல் மன்னன் சிம்புவை காதலித்தார். அவருடன் அப்படி இப்படி என இருந்துவிட்டு திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

ஏன் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன்னரே நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஏன் அவருக்காக மதம் கூட மாறினார்.

இந்நிலையில் திடீரென அவரையும் பிரிந்துவிட்டார். சரி, நயன்தாரா வாழ்க்கையில் இனி காதல் கதை அவ்வளவு தானா என எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் வந்து சேர்ந்தார் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடிதான் எனும் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இங்குதான் நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியவில்லை என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

என்னமோ முதல் முறை காதலிப்பது போல நடித்து சிவனுடன் புகைப்படம் போடுவது, ரொமான்ஸ் செய்வது என ரசிகர்களை டென்ஷன் ஏற்றி வருகிறார்.

இவரையாவது நயன்தாரா திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவன் நயன்தாராவை மீறி ஒரு சின்ன சேட்டை செய்தாலும் தூக்கி அடித்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆசிரியர் - Editor II