முந்தானை முடிச்சு ரீமேக்- சசிக்குமாருடன் ஜோடி போடுவது யார் தெரியுமா? செம்ம செலக்ஷன் பாஸ்

முந்தானை முடிச்சு ரீமேக்- சசிக்குமாருடன் ஜோடி போடுவது யார் தெரியுமா? செம்ம செலக்ஷன் பாஸ்

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் முந்தானை முடிச்சு. பாக்யராஜுக்கு பெண் ரசிகைகளை அதிகம் கொடுத்த படமாகவும் இது கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் 37 வருடங்களுக்கு பிறகு தமிழில் முந்தானை முடிச்சு படம் ரீமேக் ஆக உள்ள தகவல் சில நாட்களுக்கு முன்பே வெளியானது. சுந்தர பாண்டியன் புகழ் சசிகுமார் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

JSB Film Studios-ன் JSB சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ஊர்வசி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படம் 2021ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இளைஞர்களை கவர்வதற்காக வைக்கப்பட்ட டீச்சர் கதாபாத்திரம் செம ஹைலைட் சமாச்சாரம் அந்த நேரத்தில். அந்த ரோலில் யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II