இன்று சி எஸ் கே vs மும்பை போட்டியில் ஆடும் வீரர்கள் இவர்கள் தான்! அறிமுகம் ஆவாரா தமிழக வீரர்?

இன்று சி எஸ் கே vs மும்பை போட்டியில் ஆடும் வீரர்கள் இவர்கள் தான்! அறிமுகம் ஆவாரா தமிழக வீரர்?

ஐபிஎல் 2020 ஆறு மாசம் தள்ளி போய் இன்று இரவு துவங்குகிறது. முதல் போட்டியில் இரண்டு ஜாம்பவான் அணிகள் மோதுகின்றன. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் இல் அதிக ரசிகர் வட்டம் உடைய இரண்டு டீம்கள். துவக்க போட்டி மட்டுமன்றி கடைசி பைனல் போட்டி ஆடி அதிக அனுபவம் பெற்ற டீம்கள் இவர்கள்.

மும்பை அணி ஏலத்திற்கு முன்பே ஸ்ட்ராங் ஆக தான் இருந்தது. டீம்மில் பெரிய வீக்னஸ் கிடையாது. இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என சரியான கலவையில் தான் உள்ளது டீம். சீசன் துவங்கும் முன் ரோஹித் மத்திய வரிசையில் ஆடக்கூடும், ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் துவக்கவீரர் என்றனர் ஆலோசகர்கள். எனினும் தான் ஒபெநிங் தான் என சொல்லிவிட்டார் ரோஹித். மலிங்கா இல்லாதது சற்றே ஏமாற்றம் தான், எனினும் ட்ரெண்ட் போல்ட் மாற்றுவீரராக கட்டாயம் கலக்குவார். பாண்டியா பரதர்ஸ் அதிரடியை காண அனைவருமே ஆர்வமாக தான் உள்ளோம்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச 11 – ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கோல்டர் நயில், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரிட் பும்ரா. (சப்ஸ்டிட்யூட் – சவுரப் திவாரி)

டாடிஸ் டீம் என சொல்லப்படும் டீம். அனுபவத்தை மட்டுமே மூலதனமாக உடைய டீம். இளம் வீரர்கள் ஸ்குவாடில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் சென்ற சீசன் வரை. ஆனால் இம்முறை நிச்சயம் நிலை மாறும். காரணம் ரெய்னா மற்றும் ஹர்பஜன் விலகியது தான். ருத்ராஜ் கைக்கவாட், நாராயணன் ஜெகதீசன், சாய் கிஷோர் போன்றவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் சீசன் துவக்கத்தில் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 – ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டு பிளேஸி, கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, ஷரத்துல் தாக்குர், தீபக் சாஹர், பியூஸ் சாவ்லா / சாய் கிஷோர், இம்ரான் தாஹிர். (சப்ஸ்டிட்யூட் – முரளி விஜய்)

ஆசிரியர் - Editor II