இலங்கை கல்வி இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது

இலங்கை கல்வி இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது
இலங்கையினுடைய கல்வியானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய வரலாற்றைக் கொண்டது எனலாம். ஆரம்ப காலப்பகுதியில் இலவசக் கல்வியானது ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலங்களில் இலவசக் கல்வியின் அறிமுகமானது நாட்டினுடைய கல்வி வீதத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது எனலாம்.
இந்தியாவின் பேரரசர் அசோகர் அனுப்பிய பிக்குகளிடமிரந்து  தேவநம்பியதீசன் மன்னனின் ஆட்சியில் சமஸ்கிருத மொழி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என நம்பப்படுகிறது. அக்காலப்பகுதியில் பௌத்த  விகாரைகளை  அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறை காணப்பட்டது. 

காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்தில் கடலோர மாகாணங்களிலும் பிற்பட்ட காலப்பகுதியில் தரைப் பிரதேசங்களிலும்  கிறிஸ்தவ மிஷனரி சங்கங்கள் கல்வியில் முன்னோடியாகத் திகழ்ந்தன.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கோல்புரூக் கமிஷனை தொடர்ந்து ஆங்கில அரசு பள்ளிகள் கல்வியின் யுகம்  கொண்டுவரப்பட்டது. 

கோல்புரூக் கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் 1836 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியாளர்களால் அரசுப்பள்ளிகள் தொடங்கப்பட்டது. இதுஅரசாங்கத்தின் பாடசாலை கல்வி முறையின் தொடக்கமாக கருதப்படுகிறது.

அவ்வாறு நிறுவப்பட்டமையால் ஆரம்பிக்கப்பட்டது கொழும்பு ரோயல் கல்லூரி, கல்கிஸை தோமஸ் கல்லூரி, கண்டி ட்ரின்டீ கல்லூரிகளாகும். இக்காலத்தில் வடமொழி பாடசாலை கல்வி இலவசமாக காணப்பட்டன. 
1931ஆம் ஆண்டு உலகளாவிய உரிமை வழங்கியதை தொடர்ந்து 1945 ஆம் ஆண்டில் இலங்கை கல்விமுறை இலவசமாக பட்டது. இதில் c.w.w. கன்னங்கரா மற்றும் அமல சூரிய போன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய கல்வி நிர்வாகக் குழு இலவச கல்வி நிறுவுவதில் முயற்சி செய்தனர்.

இந்த முயற்சியின் நோக்கம் அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்குவதாகவும் என்ற நாட்டில் சிதறிக்கிடக்கும் மத்திய மகா வித்தியாலய இக்கால அரசாங்கத்தில் நிறுவப்பட்டதாகும். 

1942 ஆம் ஆண்டு கல்வி முறையை கவனிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது அதன்பிறகு வந்த சில பரிந்துரைகள் பின்வருமாறு.

1. எல்லா குழந்தைகளும் இலவசக் கல்வியை கிடைக்கச் செய்தல்.

2. ஆங்கிலத்திற்கு பதிலாக தேசிய மொழிகளை கற்பிக்க முன்னுரிமை.

3. பாடசாலை முறையை பகுத்தறிவு படுத்துதல்.

4. வயது வந்தோரின் கல்விக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் 

இவ்வாறு முக்கிய சில விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டன. 

சுதந்திரத்துக்குப் பின்னர் பாடசாலைகளின் எண்ணிக்கையை கல்வி அறிவு வீதம் அதிகாரிகளான புள்ளிவிபர அவரின் கூற்றுப்படி சுமார் 10 ஆயிரத்து 12 பாடசாலைகள் காணப்படுகின்றன. 

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையினுடைய கல்வியறிவு விகிதம் 93.3% ஆக காணப்பட்டது இது உலக தரவுகளின்படி சராசரியை விட அதிகமாகும். 
ஆசிரியர் - Editor II